ஆசிய உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : இலங்கை வீரர் சண்டிமால் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்….!!!
6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வீரர் சண்டிமால் காயம் காரணமாக விலகி உள்ளார்.
6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 15 – ந் தேதி துபாய் மற்றும் அபுதாபியில் தொடங்குகிறது. இதற்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியில் சண்டிமால் இடம் பெற்று இருந்தார்.
இந்த நிலையில் காயம் காரணமாக சண்டிமால் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து விலகி உள்ளார். உள்ளூரில் நடந்த 20 ஓவர் போட்டியில் சண்டிமால் கைவிரலில் காயம் அடைந்தார். அவர் குண்மடையாததால் ஆசிய கோப்பையில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் திக்வாலா தேர்வு செய்யப்பட்டார்.