ஆசியக் கோப்பை மகளிர் டி -20 கிரிக்கெட்!இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி!
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆசியக் கோப்பை மகளிர் 20-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
கடந்த 3.,ஆம் தேதி முதல் மலேசியாவில் இந்தியா, வங்க தேசம், மலேசியா, பாகிஸ்தான், இலங்கை, உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி, 73 ரன்கள் என்ற எளிதான இலக்கை எட்டியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 34 ரன்களும், ஸ்மிரிதி மந்தனா 38 ரன்களும் எடுத்தனர்.
17-வது ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. கோலாலம்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசம்-மலேசியாவுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இந்தியா இறுதிப்போட்டியில் மோதும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.