இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான முகமது சிராஜிற்கு நல்ல எதிர்காலம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான அங்கீகாரமில்லாத முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இளம் பவுலர் முகமது சிராஜ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வளர்ந்துவரும் பவுலரான சிராஜ் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய ஏ அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முகமது சிராஜ் முதிர்ச்சியுடன் பந்துவீசுகிறார். கடந்த சில போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகிறார் சிராஜ். கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய ஜூனியர் அணியில் சிராஜ் அதிகம் ஆடியதில்லை. எனினும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு தனது திறமையை வளர்த்துக்கொண்டு அருமையாக வீசுகிறார் சிராஜ். அவர் தனது திறமையை சிறப்பாக வளர்த்துவருகிறார். சிராஜிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது என ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார்.
ராகுல் டிராவிட்டின் பாராட்டையே பெற்றுவிட்டதால், சிராஜிற்கு கண்டிப்பாக கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…