அவதூறு வழக்கு போட்டு ரூ.100 கோடியை இழப்பீடாக கேட்பேன்- அசாருதீன் திட்டவட்டம்

- விமான விக்கெட் மோசடி விவகாரம் புகார் கொடுத்த டிராவல் ஏஜென்ட்
- அவதூறு வழக்கு தொடர்ந்து 100 கோடியை கேட்பேன் என்று அசாரூதீன் திட்டவட்டம்
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் அசாருதீன் உள்ளிட்ட 3 பேர் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததில் 21 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக மகாராஷ்டிர மாநிலத்தில் அவுரங்காபாத் போலீசாரிடம் டிராவல் ஏஜென்ட் முகம்மது சகாப் என்பவர் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்து வருகிறது.
இந்நிலையில் அசாருதீன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விமான முன்பதிவு மோசடியில் எனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று மறுத்துள்ள அசாருதீன் தன் மீது புகார் அளித்த டிராவல் ஏஜென்டுக்கு எதிராக சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்தார்.மேலும் புகார் அளித்த அந்த டிராவல் ஏஜென்ட்டின் மேல் அவதூறு வழக்கு தொடுத்து இழப்பீடாக 100 கோடி ரூபாய் கேட்பேன் என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்துள்ளார்.