ஆனால் தந்தையின் செல்வாக்கினால்தான் அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டதாக ட்விட்டர் வாசிகள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
ஒரு ட்விட்டர்வாசி, “பிரணவ் தனவாதே ஒரு டாக்ஸி ஓட்டுநரின் மகன் தேர்வு செய்யப்படவில்லை. அர்ஜுன் டெண்டுல்கர், சச்சினின் மகன் தேர்வாகிவிட்டார்”
இன்னொருவர் பாலிவுட்டுக்குப் பிறகு விளையாட்டிலும் தந்தைக்குப் பின் மகன் என்ற வாரிசரசியல் தொடர்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொருவர் மிகவும் கேலியாக ‘மரபணுவை வைத்து இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அர்ஜுன் நன்றாக ஆடினால் பிற்பாடு பண்டைய இந்தியாவில் மரபணுவியல் ஆய்வு இருந்தது என்று அவர்கள் பெருமையடித்துக் கொள்ளலாம்’ என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால் இந்த எதிர்மறை விமர்சனங்களை விட நேர்மறையான ஆதரவுக்குரல்தான் அதிகமுள்ளது.
ஹர்ஷா போக்ளே: “சச்சினின் மகன்” என்பதால் அல்ல இது அர்ஜுன் டெண்டுல்கர் என்ற ஒரு தனிப்பட்ட வீரரின் தேர்வு, இதனை நாம் மதிக்க வேண்டும்’ என்று பதிவிட.
இவரைத் தொடர்ந்து பலரும் அர்ஜுன் டெண்டுல்கரின் ஆட்டத்திறனை வைத்தும், அவர் எடுத்த விக்கெட்டுகளை வைத்தும்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் பலரும் அர்ஜுன் தேர்வுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் அண்டர் 19 எல்லாம் கடந்து 16 வயதிலேயே டெஸ்ட் வீரரானார் ஆனால் அர்ஜுன் அண்டர் 19 ஆடி வருகிறார் இது நெபோட்டிசமா என்று பலரும் கடிந்து கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.