அப்ரிடியை வறுத்தெடுத்த இந்திய முக்கிய தலைகள் …!முதல நீங்க அடக்கி வாசிங்க …!

Default Image

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் சர்ச்சை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே தொடர்ந்து நீடித்தது. காஷ்மீர் பகுதியில் தீவிரவாத ஊடுருவலும் இந்தியா – பாகிஸ்தான் இராணுவத்தினர் இடையே அடிக்கடி துப்பாக்கி சூடும் நடந்து வருகிறது.

இதற்கிடையில்,காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்து கூறினார். அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,”இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில், வருத்தமளிக்கும் வகையிலும் அபாயகரமான வகையிலும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சுய உறுதி மற்றும் சுதந்திரத்துக்காகப் போராட்டம் நடத்தி வருபவர்களின் குரலை ஒடுக்க, அவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிகழ்வுகளைத் தடுக்க, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சர்யமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஷாகித் அஃப்ரிடியின் கருத்துக்கு இந்தியக் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவும் பதிலடி கொடுத்துள்ளார்.அவர் தனது ட்விட்டரில் “காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி. அது, எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருக்கும். எங்கள் மூதாதையர்கள் பிறந்த புண்ணிய பூமி அது. எங்கள் காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் ஆக்கிரமித்து போர் நடத்திவரும் பாகிஸ்தான் ராணுவத்திடம், அவற்றை நிறுத்துமாறு ஷாகித் அஃப்ரிடி சொல்லுவார் என்று நம்புகிறேன். நாங்கள் விரும்புவது வன்முறையை அல்ல; அமைதியை மட்டுமே” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ஷாகித் அஃப்ரிடியின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பதிலடி கொடுத்த நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னாவும் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்