அது நோ பாலா..!நடுவரை கடைந்து எடுத்த வீரர்..!!கதிகலங்கி போன களநடுவர்..!!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியானது டாக்காவில் நடந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.2 ஓவர்கள் முடிவில் ஆல் அவுட்டாகி 190 ரன்கள் எடுத்தது.அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்கவீரர் எவின் லீவிஸ் 36 பந்துகளில் 89 ரன்கள் விளாசி தனது அணிக்கு ரன் சேர்த்தார்.
https://twitter.com/NaaginDance/status/1076481154843377664
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியானது 17 ஓவர்களிலே ஆல் அவுட்டாகி 140 ரன்கள் எடுத்தது.இதனால்வெஸ்ட் இண்டீஸ் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி-20 தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இந்த போட்டியின் இடையே அம்பயர்கள் பலமுறை தவறான அவுட்களை வழங்கி கடுப்பேத்தினர்.
இந்நிலையில் கடைசி போட்டியில் வங்கதேச அணி பேட்டிங்கின் செய்த போது, 4 ஓவரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் தாமஸ் வீசினார். அதில் அந்த ஓவரின் கடைசிப் பந்தை தாமஸ் சரியாக வீச அதை அம்பயர் நோபால் என்று அறிவித்தார்.இதனால் தான் சரியாக பந்தை வீசிய நிலையிலும் அம்பயரின் தவறான முடிவால் ஆத்திரம் அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ப்ராத்வெய்ட் அம்பயர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.
இதனால் போட்டி 8 நிமிடங்கள் தடைபட்டது.பின்னர் நடைபெற்ற போட்டியில் 50 ரங்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபாரா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இதே போல் தான் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு அவுட் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/NaaginDance/status/1075750527890272256