அதிரடி காட்டி ரன் குவித்த இந்தியா… ஆஸ்திரேலியாவிற்கு 341 ரன்கள் இலக்கு..!
- ஆஸ்திரேகியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 340 ரன்கள் குவிப்பு
- 341 ரன் கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிரங்குகிறது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோற்றதால் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காரணம் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டது.வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றி இந்திய அணிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இன்றைய போட்டியில் தன் முழு ஆட்டத்தை காட்ட ஆஸ்திரேலியாவும் களம் இறங்கியது.
இந்நிலையில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.இதனால் பேட்டிங்க் செய்ய களமிரங்கிற இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன் களை குவித்து உள்ளது.இதனால் 341 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆஸ்திரேலியா களமிரங்குகிறது.