ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் உதவியது அதில் அதிரடியாக விளையாடி 119 ரன்களை குவித்து இருந்தார்.அதில் 8 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் அடங்கும்.தனது ஒருநாள் போட்டியில் ரோகித்தின் 29வது சதம் இதுவாகும். 224 போட்டியில் 217 இன்னிங்சில் இதை எடுத்துள்ளார். இதன் மூலமாக அதிக சதம் அடித்த வீரர்களில் இதுவரை 4வது இடத்தில் இருந்து வந்த ஜெயசூர்யாவை முந்தினார்.
அவ்வாறு பட்டியலில் தற்போது வரை சச்சின் தெண்டுல்கர் (49 சதம்), விராட் கோலி (43) சதம், ரிக்கி பாண்டிங் (30) சதம் ஆகியோருக்கு அடுத்த படியாக தற்போது ரோகித் சர்மா 4வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் ஜெயசூர்யா 28 செஞ்சுரியுடன் 5வது இடத்தில் உள்ளார்.
32 வயது நிரம்பிய ரோகித் சர்மா 29 சதத்தில் 19 செஞ்சுரியை கடைசி 70 இன்னிங்சில் எடுத்து முத்திரை பதித்து உள்ளார்.கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பு 147 இன்னிங்சில் 10 சதம் அடித்து இருந்தார். தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா தனது 8வது சதத்தை (40 இன்னிங்ஸ்) எடுத்தார். தெண்டுல்கர் 9 சதம் (70 இன்னிங்ஸ்) அடித்து முதல் இடத்தில் உள்ளார். அதே போல் விராட்கோலி 38 இன்னிங்சில் 8 சதம் அடித்து உள்ளார்.கோலியை ரோகித் சமன் செய்தார்.
ஒரு அணிக்கு எதிராக 8 சதங்களுக்கு மேல் இந்திய வீரர்கள் மட்டுமே அடித்து உள்ளனர். கோலி, தெண்டுல்கர், ரோகித் சர்மா இந்த வரிசை பட்டியலில் உள்ளனர்.கோலி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 9 சதம் அடித்து உள்ளார்.அதே போல் ரோகித் 4 ரன் எடுத்த போது ஒருநாள் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப்படைத்தார். 9 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் எடுத்த 3வது வீரர் ரோகித் ஆவார் இதை தனது 217 இன்னிங்சில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…