இங்கிலாந்து அணிக்கு எதிராக வாண்டரர்ஸில் நடக்க இருக்கும் 4வது டெஸ்ட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் போட்டி என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுபிளெசிஸ் என்று தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இருந்து வரும் டுபிளெசிஸின் பார்ம் தற்போது பெரிய அளவில் சரிந்து உள்ளது. மேலும் வருடைய கேப்டன்சியில் கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் 7 டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா தோற்று அடிவாங்கியது. டுபிளெசி சதம் எடுத்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது.தன் கடைசி 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சராசரி 21.25 என்று அடிமட்டத்திற்கு குறைந்து உள்ளது.எனவே இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியே உங்களின் கடைசி போட்டியா என்று டுபிளெசிஸிடம் கேள்வி எழுப்பினர் அதற்கு ஆம் இது நடைபெற சாத்தியம்தான்.
மேலும் நான் உணர்ச்சிவயப்பட்டுமுடிவெடுக்க விரும்பவில்லை. அணிக்கு ஒரு வலுவான தலைவராக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். பாதி தொடரில் சாரி பாய்ஸ் நான் ஆட்டத்துக்கு வரவில்லை போதும் என்று கூறி ஒதுங்குவதையே ஒரு தலைவர் செய்கின்ற மிக மோசமான காரியமாக கருதுகிறேன் என்றால். இது ஒரு தலைமைக்கு அழகல்ல.மிக கடினமான காலங்களில் தான் பணி மிகச்சிறப்பாக நாம் தொடர வேண்டும்.
டி20 உலகக்கோப்பை முடிந்த பிறகு என் நிலை குறித்து பற்றி கண்டிப்பாக ஆய்வு செய்வேன். அணிக்கு அதிகம் டெஸ்ட் போட்டி தற்போது கிடையாது எனவே அடுத்த டெஸ்ட் போட்டியான இங்கிலாந்து டெஸ்ட் மிகப்பெரியது, இதில் ட்ரா செய்ய மிகவலுவாக ஆட வேண்டும்.ஒருநாள் கிரிக்கெட்டி போட்டிகளில் உலகத்தின் சிறந்த வீரர்களுள் ஒருவனாக இருப்பதை சராசரி காட்டுகிறது, டி20 கிரிக்கெட்டிலும் ஒரு அள்விற்கு பரவாயில்லை, ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது ஆட்டம் சரியில்லை. என் சராசரி இதில் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இல்லை.
நீங்கள் கேட்ட கேள்வியை போல் நான் ஓய்வு அறிவித்து அணியை விட்டு விலகும் போதுதான் நம் தேவை அதிகமாக தேவைப்படும். இது என் ஸ்டைல் அல்ல. என் தேவை அதிகமாக அணிக்கு இருக்கும் காலத்தில் நான் அணியை பாதியில் விட்டுவிட்டுச் செல்ல மாட்டேன். அணி மாற்றத்தில் இருக்கிறது, இப்போது நான் அவுட் என கூறுவது முறையில்லை என்று தனது ஓய்வு குறித்த கேட்டக்கப்பட்ட கேள்விக்கு டுபிளெசிஸ் முற்றிப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அம்மா என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று. மறைந்து விட்டாலும்,…
சென்னை : அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா…
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…