இந்திய அணி இங்கிலாந்துடனான போட்டியில் தமிழக வீரர்கள் தமிழ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருபது ஓவர் ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றது.இருபது ஓவர் போட்டியை இந்திய அணி 1-2 என்ற கணக்கிலும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது .
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பின்னர் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி 88 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் அடித்துள்ளது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அஷ்வின்4 விக்கெட்டுகளும்,முகமது சமி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள்,ஜானி 70 ரன்களும் அடித்தனர் .
இந்த போட்டியில் இந்திய அணியில் மொத்தம் மூன்று தமிழக வீரர்கள் உள்ளனர்.தொடக்க வீரர் முரளி விஜய் ,விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்,சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் உள்ளனர்.
நேற்று நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது.
இந்த போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் தினேஷ் மைதானத்துக்குள் தமிழிலே பேசி அசத்தியுள்ளார்.அஷ்வின் பந்துவீச வருகையில் தினேஷ் கார்த்திக் பேசியது,”டேய், டேய்.நீ வேற மாதிரி டா, போட்றா போட்றா மாமா, தூக்கிடலாம்”, “நல்லா இருக்கு அஸ்வின், நல்லா இருக்கு”, “போடு மாமா, போடு மாமா, அடுத்த மூணு பந்தையும் அதே இடத்துல போடு,அவன் என்ன பண்றான்னு பாக்கலாம்” என்று தமிழ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…