அடுத்தடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி…ஆடம் மில்னே விலகல்..சென்னை அணியில் புதிய வீரர் சேர்ப்பு!
வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே தொடரில் இருந்து விலகிய நிலையில், புதிய வீரராக மதீஷா பத்திரனா சேர்ப்பு.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 15வது சீசன் கடந்த மாதம் தொடங்கி மும்பை, புனே மற்றும் மகாராஷ்டிரா போன்ற நகரங்களில் உள்ள மைதானங்களில் லீக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்கிய நிலையில், மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளனர். எனவே, நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில உள்ளது.
மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்கிய சென்னை அணிக்கு சிறப்பாக இதுவரை அமையவில்லை. ஏனெனில், ஏலத்தில் சொதப்பியது களத்தில் தெரிந்தது. அதாவது, சென்னை அணியில் அதிரடியான பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், முக்கிய மற்றும் சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லை, அதுவே தோல்வியின் காரணமாக கருதப்படுகிறது.
அதுவும், முக்கிய பந்துவீச்சாளரான தீபக் சஹாரை ரூ.14 கோடிக்கு மெகா ஏலத்தில் சென்னை அணி எடுத்தது. இதனால், தோல்வியில் இருந்து சென்னையை மீட்க காயத்தில் உள்ள தீபக் சஹார் குணமடைந்து விரைவில் அணியில் இணைவார் என கூறப்பட்ட நிலையில், தொடரில் இருந்து தீபக் விலகுவதாக சென்னை அணி அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தீபக் சஹாருக்கு பதிலாக இன்னும் வேறு வீரர் யாரையும் சென்னை அணி எடுக்கவில்லை. இருப்பினும், முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் குல்கரணி அல்லது இஷாந்த் ஷர்மாவை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே தொடை காயம் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார் என சென்னை அணி அறிவித்துள்ளது அடுத்தடுத்து ரசிகர்களுக்கு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் 2022க்கான வீரர்கள் ஏலத்தில் சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்ட மில்னே, கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக சீசனின் முதல் ஆட்டத்தில் விளையாடினார் என்பது குறிப்பிடப்படுகிறது.
ஆடம் மில்னே தொடரில் இருந்து விலகிய நிலையில், நடப்பு சீசன் முழுவதும் மில்னேவுக்கு பதிலாக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா சேர்க்கப்படுவதாகவும் சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 19 வயதான மதீஷா பத்திரனா 2022ம் ஆண்டு U19 உலகக் கோப்பையில் இலங்கைக்காக விளையாடியுள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான பத்திரனா, 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2020ல் U19 உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதீஷா பத்திரனாவின் பந்துவீச்சு, இலங்கை வீரர் லலித் மலிங்கா போன்றே இருப்பதால், அவரை பேபி மலிங்கா என்றும் கூறப்படுகிறது.
Adam Milne to miss IPL 2022 due to injury. Wishing him a minnal recovery to be up and running in a flash soon!#WhistlePodu #Yellove ???????? @AdamMilne19
— Chennai Super Kings (@ChennaiIPL) April 21, 2022