அசைக்க முடியாத இடத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை அசைத்த விராட் கோலி …!வலுவான முதலிடத்தை பிடித்த விராட் கோலி …!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தரவரிசையில் 32 மாதங்களாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியது.இதன் பின் முதலாவது இன்னிங்சில் இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 274 ரன்கள் அடித்ததது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 149 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.இரண்டாவது இன்னிங்சிலும் விராட் மட்டும் பொறுமையாக ஆடி 51 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.இவர் 934 ரேட்டிங் உடன் முதலிடத்தில் உள்ளார்.அதேபோல் ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் 929ரேட்டிங்வுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.மேலும் இந்திய வீரர் பூஜார 791 ரேட்டிங்வுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் 32 மாதங்களாக முதலிடத்தில் இருந்தவர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆவார்.யாருமே அசைக்க முடியாத அளவில் அவர் இருந்தார்.இவரை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார் கடந்த சில மாதங்களாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது அசுர ஆட்டத்தால் இந்த நிலைக்கு வந்துள்ளார் .அதேபோல் ஒரு நாள் போட்டியிலும் விராட் முதல் இடத்தில் உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.