ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி முதல் டெஸ்ட்டை அடிலெய்டில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்க்கில் சாதித்தது.இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வரும் நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டு அவர் மைதானத்திலிருந்து அதிருப்தியுடன் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு இடையான 2 வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்தது அந்த அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அடுத்து களமிரங்கிய இந்திய அணி நேற்றைய நேர ஆட்ட முடிவில் இந்திய அணியானது 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது.இந்நிலையில் களத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 82 ரன்களுடனும் சக வீரர் ரஹானே 51 ரன்களுடனும் இருந்தனர்.இதனிடையே இன்றைய 3 ஆம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி முதல் ஓவராக பந்து வீசிய லயன் பந்துவிச்சீல் விக்கெட் கீப்பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து இந்திய வீரர் ரஹானே 51 ரன்னில் அவுட்டாகி வெளியேற.அடுத்து கோலியோடு இணைந்த ஹனுமா விஹாரி இருவரும் நிதானமாக ஆடி அதில் கோலி அபாரமாக தனது 25 வது டெஸ்ட் சதத்தை கிரிக்கெட் உலகில் நிறைவு செய்தார்.
மறுபுறம் நிதானமாக விளையாடிய ஹனுமா விஹாரி 20 ரன்களில் வெளியேற 6 வது விக்கெட்டுக்கு விராட்டுடன் இளம் வீரர் ரிஷப் பந்து இணைந்து விளையாடி வந்தனர்.
இந்நிலையில் ஆட்டத்தின் 92வது ஓவரை கம்மின்ஸ் வீச இந்த ஓவரில் வீசப்பட்ட கடைசிப் பந்தானது விராட் கோலியின் பேட்டில் பட்டு சென்று பந்தை 2 வது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ஹேட்ஸ்கம்ப் பிடித்தார். இதற்கு நடுவர் அவுட் அளித்த நிலையில் ஆனால் விராட் கேட்ச் பிடித்ததில் சந்தேகம் இருந்ததை தொடர்ந்து மூன்றாவது நடுவருக்கு அப்பீல் செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது நடுவரோ டி.வி. ரீப்ளேயில் விராட் பேட்டில் பட்டு சென்ற பந்தையும் பந்தை பிடித்த ஹேண்ட்ஸ்கம்ப் பிடித்ததையும் ஆய்வு செய்த நிலையில் பந்து ரீப்ளே காட்சியில் தரையில் பட்ட பிறகு தான் ஹேன்ட்ஸ்கம்ப் பிடித்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்தது.
ஆனால் ரீப்ளே மற்றும் ஜும் செய்து பார்த்த மூன்றாவது நடுவர்கள் பந்து தரையில் பட்டு தான் ஹேன்ட்ஸ்கம்ப் பிடித்துள்ளார் என்பது தெளிவாக அறியமுடிந்த நிலையிலும் இது விராட்டின் சந்தேகத்திற்கு பலன் கிடைத்துவிட்டது என்று எல்லோரும் கோலிக்கு அவுட் அளிக்க மாட்டார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் கோலி அவுட் என்று மூன்றாவது நடுவர் அறிவித்ததால் கேப்டன் விராட் ஏமாற்றமடைந்தது மட்டுமல்லாமல் மிகுந்த அதிருப்தியுடனும் கடும் கோபத்துடனும் வெளியேறினார். இந்த அவுட்டை எதிர்த்து அங்கு நிறைந்திருந்த ரசிகர்களும் கனத்த உரத்த குரலில் கோஷமிட்டு தங்களின் ஏமாற்றத்தை மைதானத்தில் பதிவு செய்தனர்.
இந்நிலையில் சதமடித்த விராட்கோலி 123 ரன்களில்(257பந்து) ஆட்டமிழந்து வெளியேற அவர் அடித்த சதத்தில் ஒரு சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் அடுத்து வந்து களமிரங்கிய ஷமி சுழற்பந்து வீச்சாளர் லயன் பந்துவீச்சில் வந்தவேகத்தில் டக்அவுட் ஆகி வெளியேற மதிய உணவு நேர இடைவேளை என்பதால் இந்திய அணி 93.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…