குடியுரிமைத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதை தொடர்ந்து இரு அவையிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஜனாதிபதி கோவிந்த் குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து உள்ளார்.
இந்த சட்ட மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து உள்ளது.ஆனால் அசாமில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று கவுகாத்தியில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.இத்தகைய காரணங்களால் அசாம், திரிபுராவில் கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அசாம் மற்றும் திரிபுராவில் நடைபெற இருந்த ராஞ்சி தொடருக்கான போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த போட்டிகள் வேறு மாநில மைதானங்களில் நடைபெறுமா? அல்லது அணிகளுக்கு புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்படுமா ?போன்ற விவரங்களை கிரிக்கெட் வாரியம் கூறவில்லை ஆனால் ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் என கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…