அசாம் , திரிபுராவில் நடைபெறும் தொடர் போராட்டத்தால் கிரிக்கெட் போட்டி ரத்து..!

- குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் , திரிபுராவில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- இதனால் அங்கு நடைபெற இருந்த ராஞ்சி தொடருக்கான போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
குடியுரிமைத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதை தொடர்ந்து இரு அவையிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஜனாதிபதி கோவிந்த் குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து உள்ளார்.
இந்த சட்ட மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து உள்ளது.ஆனால் அசாமில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று கவுகாத்தியில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.இத்தகைய காரணங்களால் அசாம், திரிபுராவில் கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அசாம் மற்றும் திரிபுராவில் நடைபெற இருந்த ராஞ்சி தொடருக்கான போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த போட்டிகள் வேறு மாநில மைதானங்களில் நடைபெறுமா? அல்லது அணிகளுக்கு புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்படுமா ?போன்ற விவரங்களை கிரிக்கெட் வாரியம் கூறவில்லை ஆனால் ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் என கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025