CPL: நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய பார்படாஸ் அணி ..!
கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் இன்று கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் – டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
இதை தொடர்ந்து இறங்கிய ஸூக்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. ஜீன்-பால் டுமினி 20 பந்தில் 65 ரன் அடித்தார். அதில் 4 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். ஜான்சன் சார்லஸ் 58 ,ஜொனாதன் 51 ரன் எடுத்தனர்.
நைட் ரைடர்ஸ் பந்துவீச்சில் கரி பியர் , பொல்லார்ட் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 129 ரன்கள் எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் அணி ஹேடன் வால்ஷ் 5 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இப்போட்டியில் ஜீன்-பால் டுமினி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.