ரூ.7½ கோடி நிதியுதவி வழங்கினார்- பிரேசில் கால்பந்து வீரர்
கொரோனா நிவாரணத்திற்கு பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் ரூ.7½ கோடி நிதியுதவியாக அளித்துள்ளார்.
கொரோனா வைரசால் உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் அதன் பாதிப்பால் மக்கள் அதிகளவு மடிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக திகழும் நெய்மார் 7.60 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார்.அவர் வழங்கிய இந்த நிதியானது ஐநா.வின் குழந்தைகள் நலநிதிக்கும், பிரேசிலை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் லூசியானோ ஹக் என்பவர் நடத்துகின்ற அறக்கட்டளைக்கும் தான் வழங்கி இந்நிதிகளை பிரித்து வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
28 வயதான நெய்மார் உலகளவில் அதிக சம்பளம் பெறுகின்ற கால்பந்து வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.