கோப்பா அமெரிக்கா: தென் அமெரிக்கா நாடுகளுக்காக நடத்தப்படும் கால்பந்து தொடர் தான் இந்த கோப்பா அமெரிக்கா தொடர், 2 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நாளை இந்த தொடர் தொடங்கவுள்ளது.
தென்னமெரிக்கா நாடுகளுக்காக நடத்தப்படும் கோப்பா அமெரிக்கா தொடரானது நாளை காலை 5.30 மணி அளவில் தொடங்கவுள்ளது. இந்த தொடரானது அமெரிக்காவில் நடைபெறுவதால் அங்கு இந்த தொடர் இன்று இரவு நடைபெறும். உலகின் அதிக நபர்களால் 3-வதாக பார்க்கப்படும் கால் பந்து தொடர் தான் இந்த கோப்பா அமெரிக்கா. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடவுள்ளனர்.
இந்த 16 அணிகளையும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒருவருக்கு ஒருவர் போட்டியிட்டு அதன் பிறகு புள்ளிப்படியல் அடிப்படையில் 4 பிரிவுகளில் இருக்கும் முதல் இரண்டு அணிகள் அடுத்த சுற்றான கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவர்கள். தற்போது 4 குழுவும், அதில் இடம்பெற்றுள்ள அணிகளை பற்றி பார்க்கலாம்.
கோப்பா அமெரிக்கா தொடர் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், முதல் போட்டியாக குரூப் A பிரிவில் அர்ஜென்டினா மற்றும் கனடா அணிகள் காலை 5.30 மணிக்கு மோதவுள்ளது. இந்த போட்டியில் கால்பந்து ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸி இடம் பெறுவரா என்பது தான் அர்ஜென்டினா ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற கோப்பா அமெரிக்கா தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதி போட்டியில் பிரேசிலை வென்று கோப்பையை வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மெஸ்ஸி தற்போது ஓய்வை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கோப்பா அமெரிக்கா தொடருக்காக அர்ஜென்டினா அணியில் இடம்பெற்றது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
ஆனால், நாளை நடக்கும் முதல் போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு சார்பாக விளையாடுவாரா என்ற எந்த தகவலும் இது வரை வெளியாகவில்லை. அதே நேரம் அவர் பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது, இதனால் அவரது ரசிகர்கள் இந்த போட்டியில் விளையாடுவர் என எதிர்ப்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.
மேலும், இது வரை 15 முறை அர்ஜென்டினா அணி கோப்பா அமெரிக்கா தொடரை கைப்பற்றி உள்ளனர், அதே போல நட்சத்திர வீரரான மெஸ்ஸியும் இந்த தொடரில் இதுவரை எட்டு முறை பலோன் டி’ஓர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…