நாளை தொடங்கும் கோப்பா அமெரிக்கா..! மெஸ்ஸி விளையாடுவாரா?

Copa America 2024

கோப்பா அமெரிக்கா: தென் அமெரிக்கா  நாடுகளுக்காக நடத்தப்படும் கால்பந்து தொடர் தான் இந்த கோப்பா அமெரிக்கா தொடர், 2 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நாளை இந்த தொடர் தொடங்கவுள்ளது.

தென்னமெரிக்கா நாடுகளுக்காக நடத்தப்படும் கோப்பா அமெரிக்கா தொடரானது நாளை காலை 5.30 மணி அளவில் தொடங்கவுள்ளது. இந்த தொடரானது அமெரிக்காவில் நடைபெறுவதால் அங்கு இந்த தொடர் இன்று இரவு நடைபெறும். உலகின் அதிக நபர்களால் 3-வதாக பார்க்கப்படும் கால் பந்து தொடர் தான் இந்த கோப்பா அமெரிக்கா. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடவுள்ளனர்.

இந்த 16 அணிகளையும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒருவருக்கு ஒருவர் போட்டியிட்டு அதன் பிறகு புள்ளிப்படியல் அடிப்படையில் 4 பிரிவுகளில் இருக்கும் முதல் இரண்டு அணிகள் அடுத்த சுற்றான கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவர்கள்.  தற்போது 4 குழுவும், அதில் இடம்பெற்றுள்ள அணிகளை பற்றி பார்க்கலாம்.

  • குரூப் A –  அர்ஜென்டினா, பெரு, சிலி, கனடா
  • குரூப் B – மெக்சிகோ, ஈக்வடார், வெனிசுலா, ஜமைக்கா
  • குரூப் C – அமெரிக்கா, உருகுவே, பனாமா, பொலிவியா
  • குரூப் D – பிரேசில், கொலம்பியா, பராகுவே, கோஸ்டாரிகா

கோப்பா அமெரிக்கா தொடர் நாளை தொடங்கவிருக்கும் நிலையில்,  முதல் போட்டியாக குரூப் A பிரிவில் அர்ஜென்டினா மற்றும் கனடா அணிகள் காலை 5.30 மணிக்கு மோதவுள்ளது. இந்த போட்டியில் கால்பந்து ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸி இடம் பெறுவரா என்பது தான்  அர்ஜென்டினா ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற கோப்பா அமெரிக்கா தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதி போட்டியில் பிரேசிலை வென்று கோப்பையை வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  மெஸ்ஸி தற்போது ஓய்வை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கோப்பா அமெரிக்கா தொடருக்காக அர்ஜென்டினா அணியில் இடம்பெற்றது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

ஆனால், நாளை நடக்கும் முதல் போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு சார்பாக விளையாடுவாரா என்ற எந்த தகவலும் இது வரை வெளியாகவில்லை. அதே நேரம் அவர் பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது, இதனால் அவரது ரசிகர்கள் இந்த போட்டியில் விளையாடுவர் என எதிர்ப்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.

மேலும், இது வரை 15 முறை அர்ஜென்டினா அணி கோப்பா அமெரிக்கா தொடரை கைப்பற்றி உள்ளனர், அதே போல நட்சத்திர வீரரான மெஸ்ஸியும் இந்த தொடரில் இதுவரை எட்டு முறை பலோன் டி’ஓர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்