கோப்பா அமெரிக்கா 2021 கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதி சுற்று இன்று நடைபெற்றது. அதில் கொலம்பியாவை வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கப்பட்ட இந்த போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சிறப்பான ஆட்டத்தை தொடக்கத்திலிருந்து வெளிப்படுத்தியது. இதனால் 7 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த பந்தை லாட்டாரோ மார்டினஸ் எளிமையாக கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை அடைந்தது. இதன் பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில் 61-ஆவது நிமிடத்தில் கொலம்பியா அணியின் லூயிஸ் டயாஸ் ஒரு கோலை அடித்தார்.
இதனால் இரு அணிகளும் சமமான கோல் கணக்கில் இறுதி நேரம் வரை இருந்தனர். பின்னர் மேலும் 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதிலும், இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் காரணத்தால் பெனால்ட்டி சூட்அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் அர்ஜென்டினா அணி 3 கோல்களும், கொலம்பியா அணி 2 கோல்களும் அடித்தனர்.
கொலம்பியா அணியின் கோலை 3 முறை அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் அருமையாக தடுத்து தள்ளிவிட்டார். அதனால், 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி கொலம்பியா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் கால் வைத்துள்ளது. இறுதி போட்டியில் பிரேசில் அணியுடன் அர்ஜென்டினா அணி விளையாட இருக்கிறது.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…