கோப்பா அமெரிக்கா: பராகுவேவை பந்தாடி பிரேசில் 4-1 என அபார வெற்றி..!

Brazil beats Paraguay , Copa America 2024

கோப்பா அமெரிக்கா: அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரின் இன்றைய C பிரிவில் அமைந்துள்ள அணிகளான பிரேசில் அணியும் மற்றும் பராகுவே அணியும் லாஸ் வேகாஸ்ஸில் உள்ள அல்லேஜியன்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

பிரேசில் வெற்றி கண்டால் அடுத்த சுற்றான காலிறுதி சுற்றுக்கு செல்வார்கள் என இருந்த நிலையில் இந்த போட்டியானது விறுவிறுப்பாக தொடங்கியது. சரியாக 30′ நிமிடத்தில் பிரேசில் அணிக்கு ஒரு பெனால்டி ஷூட் கிடைக்கும், ஆனால் அதை தவறவிடுவார்கள்.

அதனை தொடர்ந்து 35′ வது நிமிடத்தில் பிரேசில் அணியின் வினிசியஸ் ஒரு அபாரமான கோலை பதிவு செய்வார். இதன் மூலம் 1-0 என பிரேசில் அணி முன்னிலை வகித்தனர். பின் அதை தொடர்ந்து 43’வது நிமிடத்தில் பிரேசில் வீரரான சவியோ அணிக்கான 2-வது கோலை பதிவு செய்வார்.

பின் போட்டியின் 45’வது நிமிடத்தின் கூடுதலாக 5′ நிமிடம் அதிலும் வினிசியஸ் சிறப்பாக செயல்பட்டு பிரேசில் அணிக்கு 3-வது கோலை பதிவு செய்வார். இதன் மூலம் 3-0 என பிரேசில் அணி முதல் பாதியில் முன்னணி வகிப்பார்கள்.

அதன் பிறகு தொடங்கிய இரண்டாம் பாதியின் 48’வது நிமிடத்தில் பராகுவே வீரரான ஆல்டெரெட் பதிலடியாக 1 கோலை பதிவு செய்வார்.  பின் போட்டியின் 65’வது நிமிடத்தில் பிரேசில் வீரர் பக்கெட்டா 4-வது கோலை அடிப்பார்.

அதன் பிறகு பராகுவே அணி தீவிரமாக முயற்சித்தும் ஒரு கோலை கூட பதிவு செய்ய முடியாமல் போகும். இதன் காரணமாக 4-1 என கோல் முன்னிலை வகித்து பிரேசில் அணி வெற்றி பெறுவார்கள்.

மேலும், இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி அடுத்த சுற்றான காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29032025
Elon Musk announces sale of X to xAI
GoodBadUgly Second Single
RKFI -scamers
TN Police - ENCOUNTER
Kohli Angry On Khaleel
earthquake - helpline