IND vs NZ : அடுத்தடுத்த தோல்வி…12 வருட சாதனையை பரிதாபமாக இழந்த இந்தியா!
பெங்களூரு, புனே இரண்டிலும் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணிதொடரையும் வென்றிருக்கிறதது.
புனே : நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா இப்படி மோசமான விளையாட்டை வெளிப்படுத்துமா என்கிற வகையில் தொடரில் தோல்வி அடைந்து 12 வருடச் சாதனையையும் இழந்துள்ளது.
ஏற்கனவே, நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்து ஒரு சாதனையை இழந்திருந்தது. அது என்ன சாதனை என்றால், இந்தியாவில் கடந்த 36 வருடங்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்த முடியாமல் இருந்தது. இந்தச் சாதனையை நியூசிலாந்து அணி இந்தியாவை முதல் போட்டியில் வீழ்த்தி சாதனையை முறியடித்தது.
முதல் போட்டி இப்படி ஆகிவிட்டது இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று கம்பேக் கொடுக்கும் நோக்கத்தோடு இரண்டாவது போட்டியில் களமிறங்கிய இந்திய அணி மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இரண்டாவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி 79.1 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்து.
அடுத்ததாக, தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 45.3ஓவர்களில் தங்களுடைய 10 விக்கெட்களையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி இந்திய அணியை விட 103 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
அடுத்ததாகத் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து அணி 255 ரன்கள் முன்னிலையில், விக்கெட்களை இழந்தது. எனவே, மூன்றாம் நாளான இன்று 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்கத்தில் களமிறங்கிய ரோஹித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைப்போல சுப்மன் கில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். வரிசையாக விக்கெட்கள் விழுந்தபோதிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நிதானமாக களத்தில் நின்று கொண்டு 77 ரன்கள் குவித்தார்.
அந்த நிதானத்தோடு அடுத்ததாக வந்த வீரர்கள் விளையாடி இருந்தால் இந்தப் போட்டியில் வெற்றிபெற்று இருக்கலாம். ஆனால், விராட் கோலி 17, ரிஷப் பந்த் 0, வாஷிங்டன் சுந்தர் 21, சர்பராஸ் கான் 9 போன்ற முக்கிய வீரர்கள் குறைவான ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக, 60.2 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களும், இந்தியா இழந்தது.
மொத்தமாக 245 ரன்கள் மட்டுமே இந்தியா எடுத்த நிலையில் , இந்த டெஸ்ட் போட்டியை 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வென்று 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. இந்தத் தோல்வியின் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சொந்த மண்ணில் தொடரில் தோல்வி அடைந்திருக்கிறது.