சிறந்த விளையாட்டு வீரருக்கான ‘லாரியஸ்’ விருதை வென்ற ‘மெஸ்ஸி’…குவியும் வாழ்த்துக்கள்.!!

அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி லாரியஸ் உலக விளையாட்டு விருதை வென்றுள்ளார்.
ஆண்டு தோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகள், மற்றும் அணிகள் ஆகியவற்றை தேர்வு செய்து Laureus World Sports விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.
Laureus Sportsman of the Year Award has only been given to a footballer twice and an athlete that plays team sport.
2020—Leo Messi
2023—Leo Messi pic.twitter.com/3m0E35l6U8— Leo Messi ???? Fan Club (@WeAreMessi) May 8, 2023
பாரிஸில் நடந்த இந்த விருது விழாவில் கலந்துகொண்டு அவர் விருதினை பெற்றுக்கொண்டார். இந்த லாரியஸ் விருதை மெஸ்ஸி வாங்குவது முதல் முறையில்லை 2-வது முறையாக வென்றுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விருது பெற்றதை தொடர்ந்து பேசிய மெஸ்ஸி ” விருது பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
THE GOAT! LEGEND! pic.twitter.com/vmI1E1MnpC
— Leo Messi ???? Fan Club (@WeAreMessi) May 8, 2023
இந்த நேரத்தில் நான் என்னுடைய அனைத்து அணி வீரர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் ஒருவனமாக மட்டும் சாதிக்கவில்லை. லாரியஸ் விருதை என்னுடைய கைகளில் வைத்திருப்பது மிகவும் மதிக்க தக்க ஒன்று. வழியில் பல தடைகள் இருந்தன, ஆனால் நான் எப்போதும் என் மக்களின் ஆதரவுடன் என்னை மேம்படுத்த முயற்சித்தேன்.
Leo Messi’s speech after picking up the Laureus World Sportsman of the Year award – for the second time! ????????
“For me to be at this gala, it’s my first time here. It’s an honor for me to share a nomination with all these enormous athletes whom I greatly admire, anyone could have… pic.twitter.com/GgnwxVORpY
— Leo Messi ???? Fan Club (@WeAreMessi) May 8, 2023
நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது கனவையும் ஒரு முழு நாட்டின் கனவையும் என்னால் நிறைவேற்ற முடிந்தது. இந்த விருது அர்ஜென்டினா அணிக்கு அர்ப்பணிக்கிறேன் மிக்க நன்றி” என தெரிவித்துள்ளார் மேலும், சிறந்த அணிக்கான விருதை அர்ஜென்டினா கால்பந்து அணி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.