பாரா ஓலிம்பிக்கில் கைகள் இல்லாமல் 4 தங்கத்தை தட்டி சென்ற சீன வீரர்..!
பாரா ஓலிம்பிக்கில் சீன வீரர் ஜெங் தாவோ கைகள் இல்லாமல் நீச்சல் போட்டியில் 4 தங்கத்தை வென்றுள்ளார்.
பாரா ஓலிம்பிக்கில் சீன வீரர் ஜெங் தாவோ கைகள் இல்லாமல் 4 தங்கத்தை தட்டி சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர், நடப்பு பாரா ஓலிம்பிக்கில் ஆண்களுக்கான 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் , 50 மீட்டர் பட்டர்பிளை, 50மீட்டர் ஃப்ரீஸ்டைல், கலப்பு 4×50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலே ஆகிய நான்கு வகை நீச்சல் போட்டியிலும் 4 தங்கத்தை வென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது மகளிடம் “என்னைப் பார் என்னிடம் கைகள் இல்லாவிட்டாலும் என்னால் மிக வேகமாக நீந்த முடியும்” என தெரிவித்தார். ஜெங் தாவோ ஏற்கனவே 2016 ரியோ ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களையும், 2012 லண்டனில் மூன்று பதக்கங்கள் என மொத்தம் 9 பதக்கங்ககளை பெற்றுள்ளார். அவரது தனிப்பட்ட வெற்றிகள் அனைத்தும் உலக அல்லது பாரா ஓலிம்பிக் சாதனைகளாகும்.
நடப்பு பாரா ஓலிம்பிக்கில் சீனா இதுவரை 173 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் 81 தங்கம், 48 வெள்ளி, 44 வெண்கலம் அடங்கும்.