தங்கத்தை வென்று கணக்கை தொடங்கிய சீனா..! ஏர் ரைபிளில் அசத்தல்…
ஒலிம்பிக்ஸ் 2024 : 33ஆவது ஒலிம்பிக்ஸில் சீனா அணி முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. சனிக்கிழமையன்று Chateauroux-ல் நடந்த பாரீஸ் விளையாட்டுப் போட்டியின்10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவு இறுதிப் போட்டியில், தென்கொரியாவை சீனா எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், சீனாவின் ஹுவாங் யுடிங், ஷெங் லிஹாவ் ஜோடி, கொரிய வீரர்கள் வீழ்த்தி வெற்றி பெற்றனர். இதன்மூலம், 2024 ஒலிம்பிக் தொடரில் முதல் தங்கப் பதக்கம் வென்ற நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.
இதற்கிடையில், பாரிஸ் 2024-ன் முதல் பதக்கத்தை கஜகஸ்தான் வென்றது. 1996-க்குப் பிறகு துப்பாக்கிச் சுடுவதில் கஜகஸ்தானின் முதல் ஒலிம்பிக் பதக்கம் இதுவாகும். ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெளியேறியது.