சர்வதேச அளவில் மிகவும் சிறந்த 16 செஸ் வீரர்கள் பங்கேற்ற செசபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில்,தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இளம் வீரரான பிரக்ஞானந்தாவும்(16 வயது) பங்கேற்றார்.
இதனையடுத்து,தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் காலிறுதி, அரையிறுதியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா, இறுதிபோட்டியில் உலகின் நம்பர் 2 ஆன லிங் டிரனை எதிர்கொண்டார்.இப்போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லிங் டிரன் பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார்.இதனால், 2 வது இடத்தை தழுவினார் பிரக்ஞானந்தா .
எனினும்,செசபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றதால்,முதல் முறையாக சாம்பியன்ஸ் செஸ் டூரில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வேலைவாய்ப்பு வழங்கி இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு விடுத்துள்ளது.அதன்படி,பணிக்கால அடிப்படையில் தனது 18-வது வயதில் பிரக்ஞானந்தா பணியில் சேர்வார் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…