பிரீ ஸ்டைல் செஸ் கோட் சேலஞ் (Freestyle chess G.O.A.T Challenge) எனப்படும் செஸ் தொடர் தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் வித்யாசமான அம்சமே, இது வழக்கமான சதுரங்க ஆட்டம் போல் இல்லாமல், இதில் அடுக்க பட்ட சதுரங்க பலகையில் உள்ள காய்கள் எல்லாம் கலைந்து அடுக்க பட்டிருக்கும். இந்த தொடர் செஸ் 960 எனவும் அழைக்கப்படும்.
#SLvAFG : போராடி தோற்று போன ஆப்கானிஸ்தான் .!
இது முழுக்க முழுக்க கற்பனையிலும், செஸ் விளையாட்டின் திறனாலும் விளையாட கூடிய விளையாட்டாகும். ஜெர்மனியில் நடந்து வரும் இந்த செஸ் 960- ஐ ராபிட் (Rapid) முறைப்படி விளையாடி வருகின்றனர். விளையாடும் இருவருக்கும் 25 நிமிடங்கள் கொடுக்க பட்டிருக்கும், மேலும் ஒவ்வொரு நகர்விற்கும் 10 வினாடிகள் தங்களது கடிகாரத்தில் கூடி கொண்டே இருக்கும்.
நேற்று நடந்த இந்த போட்டியில் கிராண்ட் மாஸ்டர் ஆன மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து இந்திய செஸ் க்ராண்ட் மாஸ்டரான குகேஷ் விளையாடினார். வெள்ளை காய்களை வைத்து விளையாடிய இவருக்கு இந்த செஸ் 960 மிகவும் சவாலாக அமைந்திருந்தது. சற்று விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இருவரும் சமமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.
இறுதியில் கார்ல்சனின் தவறான சிறிய நகர்வால் தனது குதிரை காயை பறிக்கொடுக்க நேர்ந்தது. அதிலிருந்து ஆட்டம் குக்கேஷ் கைக்கு மாறியது. அதன் பிறகு சிறுது நேரத்தில் ஆட்டத்தின் 58 வது நகர்வில் காய்களை நகர்த்தாமல் கார்ல்சென் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இதனால் இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன குகேஷ் வெற்றி பெற்றார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…