செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் இரண்டு பிரிவுகளிலும் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

Chess Olympiad

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் ஆடவர் மற்றும் மகளீர் என இரண்டு பிரிவுகளிலும் இந்திய அணி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.

இந்திய செஸ் வரலாற்றில் இரண்டு பிரிவிலும் முதல் முறையாக தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இந்திய அணி வரலாற்று சாதனைப் பதிவு செய்துள்ளது.

ஆடவர் அணி :

கடந்த செப்-10 தேதி, தொடங்கிய இந்த செஸ் ஒலிம்பியாட் 2024 தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில், இந்திய அணி, சுலோவேனியா அணியை எதிர்கொண்டு விளையாடியது. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் டி. குகேஷ், க்ராண்ட்மாஸ்டரான விளாடிமிர் ஃபெடோசெவை வீழ்த்தினார்.

அவரை தொடர்ந்து தமிழக வீரரான ஆர்.பிரக்ஞானந்தா, ஆன்டன் டெம்சென்கோவுடன் விளையாடி வெற்றி பெற்றார். அதன் பின் 3-வதாக நடைபெற்ற ஆட்டத்திலும் இந்தியா க்ராண்ட்மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி சுபெல்ஜ் ஜானை தோற்கடித்தார்.

மேலும், கடைசி ஆட்டத்தில் இந்தியாவின் விதித் குஜராத்தி, செபெனிக் மாடேஜுடன் எதிர்கொண்டு விளையாடிய போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால், 11 சுற்றுகளின் முடிவில் இந்திய அணி 21 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. இதற்கு முன் இந்தியா ஆடவர் அணி கடந்த 2014 மற்றும் 2022-ம் ஆண்டில் நடைபெற்ற தொடர்களில் வெண்கலம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகளீர் அணி :

மகளீர் பிரிவில் விளையாடிய இந்திய மகளிர் அணி வீரர்கள், இறுதி சுற்றில் அஜர்பைஜானை எதிர்த்து விளையாடி என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 19 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.

இந்திய மகளீர் அணியில் ஹரிகா துரோணவல்லி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் ஆகியோர் இந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்றனர். ஆடவர் அணியைப் போலவே மகளிர் அணியும் இதற்கு முன் கடந்த 2022-ம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனர்.

குவியும் வாழ்த்துக்கள் :

செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர்மோடி, எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி வாழ்த்து :

மேலும், தங்கம்பதக்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி அவரது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த பதிவில், “செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்கம் வென்றது இந்தியாவிற்கு வரலாற்று வெற்றியாகும். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுளது.

நம்ப முடியாத அளவிற்கு சாதனை படைத்துள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சதுரங்க அணிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் விளையாட்டுப் பாதையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் உருவாக்கியுள்ளது. இந்த வெற்றியானது, செஸ் ஆர்வலர்களின் தலைமுறைகளை விளையாட்டில் சிறந்து விளங்க ஊக்குவிக்கட்டும்”, என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.

ராகுல் காந்தி வாழ்த்து :

மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி அவரது எக்ஸ் தளத்தில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த பதிவில், “இந்திய வீரர், வீராங்கனைகளின் குறிப்பிடத்தக்க திறமை, சிறந்த உத்திகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை பலனளித்துள்ளது. இந்த பொன்னான வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

இந்தியாவின் மகள்கள் என்ன சாதிக்க முடியும் என்ற கேள்விக்கு மகளிர் அணியினர் சிறந்த உதாரணம். இந்தியாவிற்கு ஒரு உண்மையான வரலாற்று நாள் இது”, என்று ராகுல் காந்தி பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து :

தமிழக முதல்வரான மு,க.ஸ்டாலின், தங்கம் பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள். செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு, எல்லைகளைத் தாண்டி, உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததைக் காண்பது மனதிற்கு இதமாக இருக்கிறது”, என பதிவிட்டிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்