செஸ் : எப்போதும் முதலில் வெள்ளை காய்களை நகர்த்துவது ஏன்? காரணம் இது தான்..!

Chess

செஸ் : சதுரப்பலகையில், 32 கட்டங்களில் 16 காய்களை அடுக்கி விளையாடும் விளையாட்டு தான் செஸ். இந்த செஸ் விளையாட்டு முதன் முதலில் இந்தியாவில் தான் கண்டு பிடிக்கப்பட்டது என்பது நமக்கு தெரியும். அதன்பின் நாளடைவில் உலகம் முழுவதும் அது பிரபலமாகி தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் விளையாடும் விளையாட்டாக மாறி இருக்கிறது.

மேலும், இது மொபைலில் வீடியோ கேம்மாக கூட வந்து தற்போது நம் உள்ளங்கையில் எங்கோ உள்ளவர்களிடம், இங்கிருந்தே விளையாடி வருகிறோம். சரி, என்றைக்காவது இந்த சதுரங்க விளையாட்டில் எப்போதும் வெள்ளை காய்களை ஏன் நகர்த்துகிறார்கள் என்று யோசித்தது உண்டா? இதன் காரணம் செஸ் விளையாடும் நபர்களுக்கு தெரிந்திருக்கலாம்.

ஆனால், ஒரு சிலருக்கு தெரிந்திருக்காது, தற்போது அது ஏன் வெள்ளை காய்களை முதலில் நகர்த்துகிறார்கள் என்று பார்க்கலாம். முதலில் வெள்ளை காய்களை நகர்த்தி விளையாட்டை தொடங்க வேண்டும் என்பது செஸ்ஸின் விதிகளில் ஒன்று. ஒரு சிலர் இந்த விதி இன வெறியின் காரணமாக வந்தது என கூறுவார்கள் ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை.

செஸ் விளையாட்டு பிரபலமாகி கொண்டிருந்த சமயத்தில் முதலில் யார் காய்களை நகர்த்த வேண்டும் என்று டாஸ் போட்டோ அல்லது விளையாடும் இவர்களுக்கு இடையே பேசி முடிவு செய்து கொண்டிருந்தனர். அதன்பிறகு 18-ஆம் நூற்றாண்டில் செஸ் விளையாட்டு மேலும் பிரபலமாகி கொண்டிருந்த நிலையில், அதை அடிப்படையாக வைத்து பலரும் புத்தகங்களை எழுதி வந்தனர்.

அதே பொழுது சீக்கர்ஸ் (Chekkars) என்ற ஒரு விளையாட்டை பற்றிய புத்தகங்களும் வெளியாக தொடங்கியது. அந்த விளையாட்டும் செஸ் விளையாட்டை போல கருப்பு, வெள்ளை காய்களை பயன்படுத்தி விளையாடுவார்கள். அதில், இந்த செஸ் விளையாட்டில் முதலில் வெள்ளை பக்கத்தில் துவங்க வேண்டும் என்று செஸ் புத்தகங்கள் எழுதி வெளியிட்டவர்கள் சில கோரிக்கைகள் வைத்தனர்.

அதன் பிறகு செஸ் விளையாட்டை பற்றி வெளியான புத்தகங்களில் படங்களும், குறிப்புகளும் முதலில் வெள்ளை நிற காயை நகர்த்துவது போலவே அமைந்து இருந்தது. அந்த புத்தகத்தை பார்த்து படித்து அதன்படி விளையாட கற்று கொண்டவர்களும் முதலில் வெள்ளை நிற காயை நகர்த்தியே விளையாட பழகி கொண்டனர்.

அதன் பிறகு 1850-ஆம் ஆண்டில் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு பெரிய செஸ் தொடரில் முதலில் வெள்ளை நிற காயை தான் நகர்த்த வேண்டும் என புதிய விதியை கொண்டுவந்தனர்.

அதற்கு பிறகு 1859-இல் அப்போதேயே உலக செஸ் சாம்பியனான வில்லியம் ஸ்டெய்நீட்ஸ் வெள்ளை நிற காயை முதலில் நகர்த்தி விளையாட வேண்டும் என அவர் எழுதிய புத்தக்கத்தில் எழுதி இருந்தார். அதன் பின் 19-ஆம் நூற்றாண்டில் உலக செஸ் சங்கம் உருவான போது அதனை புதிய விதியாக கொண்டு வந்தனர். அது தற்போது வரையில் விதியாக கடைபிடிக்கப் பட்டு விளையாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்