இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது .இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
நேற்று முதலில் இறங்கிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 , உமேஷ் 3 , மற்றும் ஷமி 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்து 68 ரன்களுடன் முன்னிலையில் இருந்தனர்.களத்தில் கோலி 59 , ரஹானே 23 ரன்களுடன் இருந்தனர். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை செஸ் ஜாம்பவான்கள் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் ஆகிய இருவரும் மணியை அடித்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா ஆகிய இருவரும் மணியை அடித்து போட்டியை தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 59 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 220 ரன்கள் அடித்து 114 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.களத்தில் கோலி 83 , ரஹானே 45 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…
நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…