#IPL2020: அரைசதம் விளாசிய கெய்க்வாட்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி.!
ஐபிஎல் தொடரின் 44-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் அணி மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் படிக்கல் – பின்ச் கூட்டணி களமிறங்கியது. இருவரும் நிதானமாக அடிவர, 15 ரன்களில் பின்ச் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து, 22 ரன்கள் அடித்து படிக்கல் வெளியேறினார். அதன்பின் கோலி – டி வில்லியர்ஸ் கூட்டணி களமிறங்கி அதிரடியாக ஆடிவந்தனர்.
பின்னர், 39 ரன்கள் அடித்து டி வில்லியர்ஸ் வெளியேற, பின்னர், களமிறங்கிய மொயின் அலி, 1 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். அதனைத் தொடர்ந்து, அரை சதம் அடித்து கோலி வெளியேற, இறுதியாக 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே அடித்தது.
146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி வந்த டு பிளெசிஸ் 25 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், அம்பதி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தனர்.
சிறப்பாக விளையாடிய அம்பதி ராயுடு அரைசதம் அடிக்காமல் 39 ரன் எடுத்து பெவிலியன் சென்றார். அதிரடியாகவும், நிதானமாகவும் விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசி 65* ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் நின்றார்.
இறுதியாக சென்னை அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.