10 அணிகளுக்கு இடையிலான ஆறாவது இந்தியன் சூப்பர் லீக்( ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இன்று சென்னை நேரு மைதானத்தில் 26 வது லீக் போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டியில் சென்னை எப்சி மற்றும் ஒடிசா எப்சி அணிகள் மோதுகின்றன. இரண்டு முறை சாம்பியனான சென்னை எப்சி இதுவரை 5 போட்டிகளில் ஒரு போட்டியில் டிராவும் , மூன்று போட்டியில் தோல்வியை சந்தித்தது.
கடந்த 25-ம் தேதி ஐதராபாத் அணியுடன் விளையாடிய போட்டியில் சென்னை எப்சி 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.ஒடிசா அணி 5 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் டிராவும், 2 தோல்வி கண்டுள்ளது. ஒரு வெற்றியை பெற்றுள்ளது.
இதனால் இரண்டு அணிகளும் இரண்டாவது வெற்றியை பெறவேண்டும் என்ற முனைப்புடன் இன்று விளையாட உள்ளனர். இதனால் போட்டிக்கு பஞ்சமிருக்காது இப்போட்டி இரவு 07.30 மணிக்கு தொடங்குகிறது.
இதற்கு முன் கடந்த 25-ம் தேதி ஐதராபாத் அணியுடன் வெற்றி பெற்றபோது சென்னை எப்சி இதே மைதானத்தில் தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…
சென்னை : சினிமாதுறையை போல கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வெளியாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது…
சென்னை : தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 7)…
சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…