இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்10 அணிகள் விளையாடி வருகிறது. போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் சென்னை அணி சென்னை எஃப்சி அணி விளையாடிய முதல் நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னை எப்சி அணியும் , ஹைதராபாத் எஃப்சி அணியும் மோதியது.
முதல் பாதியிலும் , இரண்டாம் பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தும் கோல் அடிக்க முடியவில்லை.பின்னர் கூடுதல் நேரத்தில் சென்னை அணி வீரர் ஆண்ட்ரி ஸ்சிம்ப்ரி முதல் கோல் அடித்தார்.
இதை தொடர்ந்து பதிலுக்கு ஹைதராபாத் வீரர் மேத்யூ கில்காலோன் பதில் கோல் அடிக்க ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இறுதியில் சென்னை வீரர் நெரிஜூஸ் வல்ஸ்கிஸ் திகில் கோல் அடித்து சென்னை அணி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…