வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆறு வருடங்களாக சிபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஏழாவது தொடர் சென்ற மாதம் முதல் இண்டீஸில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆறு அணிகள் மோதியது.
இறுதி போட்டியில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படோஸ் அணியும் , சோயிப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்படோஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பார்படோஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜொனாதன் கார்ட்டர் அரை சதம் அடித்த கடைசி வரை களத்தில் நின்றார்.
பின்னர் 172 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அமேசன் வாரியர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்து அணியின் தொடக்க வீரர் பிராண்டன் கிங் 43 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் பார்படோஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.மேலும் பார்படோஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…