ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவிக்க கோரி வழக்கு..!
ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹாக்கி விளையாட்டை தேசிய விளையாட்டாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி மனுதாக்கல் செய்துள்ளார். இதில் இவர் குறிப்பிட்டுள்ளதாவது, மத்திய மற்றும் மாநில விளையாட்டு அமைப்புகளுக்கு ஒலிம்பிக்கில் இடம்பெறக்கூடிய விளையாட்டுகளை ஊக்குவிக்க வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
ஹாக்கி விளையாட்டு இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ற கருத்து நிலவி வருகிறது. இருந்தபோதிலும் இந்த கருத்து அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ஹாக்கி விளையாட்டில் உலகில் சிறந்த ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், ஒலிம்பிக்கில் ஹாக்கி விளையாட்டு 41 ஆண்டுகளாக பதக்க வாய்ப்பை தவறவிட்டது.
தற்போது டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி விளையாட்டில் இந்தியா வெண்கலம் வென்றது. அதனால் ஹாக்கி விளையாட்டை இந்திய தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.