எப்.1 கார்பந்தயம் நடைபெறும் இடம் ரூ.600 கோடி பாக்கிக்காக நிலத்தின் மீதான குத்தகை ரத்து.!
- ஜேப்பி நிறுவனத்தால் எப்.1 கார்பந்தயம் நடத்த பயன்படுத்தப்பட்டு வந்த நிலத்தின் மீதான குத்தகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ஜேப்பி நிறுவனம் ரூ.600 கோடி பாக்கி வைத்திருந்த காரணத்துக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆக்ரா அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் குத்தகைக்கு பெற்ற ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் ஜேப்பி இன்டர்நேசனல் ஸ்போர்ட் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட மைதானத்தில் எப்.1 கார்பந்தயம் 2011 முதல் 2013 வரை நடத்தப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களுக்காக, எப்.1 போட்டி நடைபெறும் இடங்களில் இருந்து அந்த இடம் 2014-ம் ஆண்டில் நீக்கப்பட்டது.
இந்நிலையில், நிலத்தை குத்தகைக்கு அளித்த யமுனா விரைவு வழித்தட மேம்பாட்டு ஆணையத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.600 கோடி பணத்தை செலுத்தாததால், ஜேப்பி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட குத்தகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நிலம் விரைவில் ஏலமும் விடப்படவுள்ளது என யமுனா விரைவு வழித்தட மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.