மறக்கமுடியுமா.! ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.!

Default Image
  • டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
  • இப்போட்டியில் அனில் கும்ப்ளே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமை அடைந்தார்.

டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி நடக்க கூடாது என்று சில இந்து அமைப்புகள் மைதானத்தை சேதம் படுத்தினர். ஆனால் கடுமையான முயற்சிக்கு பின்பு மைதானத்தை சரிசெய்து போட்டி நடைபெற்றது.  இந்தப் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடியது. இதனையடுத்து 2-வது இன்னிங்சில் 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது. இந்த பெரிய இலக்கை எட்டமுடியாது என்றும், விக்கெட்டை விடாமல் போட்டியை சமன் செய்திடலாம் என்று பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தது.

இதைத்தொடர்ந்து அனில் கும்ப்ளே அபாரமாக பந்து வீச தொடங்கியதும், பாகிஸ்தானின் நிலைதடுமாறியது. பின்னர் கிடுகிடுவென விக்கெட்டுகள் சரியாய் தொடங்கியது. போட்டி இறுதியில் பாகிஸ்தான் அணி 207 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் அனில் கும்ப்ளே 26.3 ஓவர்கள் வீசி, அதில் 9 ஓவர்கள் மெய்டன் செய்து, 74 ரன்களை மட்டுமே கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்த இரண்டாவது வீரர் அனில் கும்ப்ளே ஆவர். இதற்கு முன் இங்கிலாந்து ஜிம் லேக்கர் என்ற வீரர் இந்த சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்