ஸ்பெயினில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் பெற்று சாதனைப் புரிந்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் 26 வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்த நிலையில்,நேற்று முன்தினம் நடைபெற்ற பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்,சக நாட்டு வீரரான லக்ஷயா சென்னுடன் மோதினார்.
முதல் செட்டை இழந்த ஸ்ரீகாந்த்,அதன்பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை தனது வசப்படுத்தினார்.போட்டியின் இறுதியில் ஸ்ரீகாந்த் 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென்னை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம்,உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் முதல் முறையாக நுழைந்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்று ஸ்ரீகாந்த் பேட்மிண்டன் வரலாற்றில் ஒரு புதிய வெற்றியைப் பதிவு செய்தார். இதன்மூலம்,இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில்,உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்,சிங்கப்பூரின் லோ கீன் யூவுடன் நேற்று மோதினார்.
இப்போட்டியின் இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 15-21, 20-22 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் லோ கீன் யூவிடம் போராடி தோல்வியடைந்தார். இதனால்,கீன் யூ தங்கப்பதக்கம் வென்ற நிலையில்,கிடாம்பிக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது.
இதன்மூலம்,உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் பெற்று சாதனைப் புரிந்துள்ளார்.இதனால்,அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும்,உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மற்றொரு இந்திய வீரர் லக்ஷயா சென் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…