‘கேப்டன்ஷிப்புக்கு ஜஸ்பிரித் பும்ரா செட்டாக மாட்டார்’! தினேஷ் கார்த்திக் சொன்ன அந்த காரணம்!
சென்னை : பும்ராவுக்கு கேப்டன்ஷி பொறுப்பு கொடுத்தால் அவருக்கு கூடுதல் பாரமாக இருக்கும் எனவும் இதனால் அவர் கேப்டனுக்கு சரியாக இருக்க மாட்டார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சை போல, அணியை வழிநடுத்துவதிலும் சிறப்பான கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் 2022 இல் எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் போது இந்தியாவை ஒரு நிலையான கேப்டனாக வழிநடத்தினார், அந்த தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. அதனைத்தொடர்ந்து, மேலும் கடந்த ஆண்டு அயர்லாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றார்.
கேப்டன்ஸியிலும் அவர் சிறப்பான ஒரு கேப்டனாக இருப்பதால் வரும் காலத்தில் இந்திய அணியின் கேப்டன் தேர்வில் அவரும் முக்கியமான ஒரு வீரராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், இந்தியாவின் வருங்கால கேப்டனாக இருக்க ஜஸ்பிரித் பும்ரா சரியான ஆல் இல்லை என்பது போல முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய தினேஷ் கார்த்திக் ” பும்ரா போன்ற ஒரு வேகப்பந்து வீச்சாளர் நம்மளுடைய அணிக்கு முக்கியமான ஒரு வீரர். எனவே, அவருடைய உடற்தகுதி நமக்கு ரொம்பவே முக்கியம்” என தினேஷ் கார்த்திக் பும்ராவை பாராட்டி பேசினார்.
மேலும், பும்ராவை முக்கியமான போட்டிகளில் விளையாட வைக்கவேண்டும் அவர் ஒரு வைரம் போன்றவர் எனவும் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக க்ரிக்பஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது, “பும்ரா எந்த வடிவமான கிரிக்கெட் போட்டிகள் என்றாலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், விளையாடுவார். எனவே, அவரை முக்கியமான போட்டிகளில் விளையாட வைக்க முடிந்த அளவுக்கு முயற்சி செய்யவேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக் “பும்ரா ஒரு வேகப்பந்து வீச்சாளர், எனவே அவரை எப்படி மூன்று வடிவங்களிலும் விளையாட வைப்பது என்பது தேர்வாளர்களுக்கு பெரிய கேள்வியாக இருக்கும் ஒரு விஷயம். அதே, சமயம் அவருக்கு கேப்டன்ஷி பொறுப்பு கொடுத்தால் கூடுதல் பாரமாக இருக்கும். எனவே, அதனை அவர் மீது திணிக்காமல் அவரை வேகப்பந்து வீச்சாளராக மட்டுமே விளையாட வைப்பது தான் சரியாக இருக்கும்” எனவும் தினேஷ் கார்த்தி தெரிவித்தார்.