இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் க்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்ய பேட்டிங் செய்ய களமிறங்கியது இந்திய அணி.
இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது .நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்த நிலையில் ஹனுமான் விஹாரி(111) சதம் அடித்தார் அவருக்கு துணையாக மறுமுனையில் ஆடையை இஷாந்த் ஷர்மா(57) அரை சதம் அடித்தார் .இந்திய அணி 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது .
அதன் பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் க்கு அரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பந்தை சமாளிக்க முடியாமல் அடைத்தடுத்து விக்கெட்களை இழந்தது.பும்ரா டேரன் பிராவோ, ஷமாரா புரூக்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரது விக்கெட்டை ஹாட்ரிக்காக எடுத்தார்.இதன் மூலம் டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார் .
இதற்க்கு முன்னதாக ஹர்பஜன் சிங் ,மற்றும் இர்பான் பதான் இந்த சாதனையை படைத்துள்ளனர்.இச்சாதனையை மிக விரைவாக படைத்த பும்ராவுக்கு பல தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்கள் இழப்புக்கு 87 ரன்களை எடுத்துள்ளது.
IND 416 – WI 87/7 (33.0)
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…