முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து செல்கிறார் பும்ரா..!
இந்தியா ,தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி நாளை முதல் நடைபெற உள்ளது. இஇந்த தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதுகில் உள்ள காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் பிசிசிஐ கூறுகையில் , பும்ரா முதுகில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இதனால் தென் ஆப்பிரிக்கா எதிரான போட்டியில் விளையாட மாட்டார். பெங்களூரில் உள்ள தேசிய அகாடமியில் குணமடையும் வரை கண்காணிப்பில் இருப்பார்.
இந்நிலையில் இவர் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல இருக்கிறார். அவருடன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் ஆஷிஷ் கவுசிக்கும் செல்ல உள்ளார் என கூறினார்.