பும்ராவுக்கு ஆண் குழந்தை! போட்டியை விட்டு அவசர அவசரமாக மும்பைக்கு பயணம்!

Jasprit Bumrah

கடந்த ஆண்டு ஆசியக் கோப்பைக்கு முன்பு, பும்ராவுக்கு முகுது பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், இந்திய அணியில் பும்ராவால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் காயத்தில் இருந்து மீண்டு வந்த பும்ரா சமீபத்தில் அயர்லாந்து தொடரில் கேப்டனாக செயல்பட்டார். பும்ரா பந்துவீச்சும் அபாரமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா ஆசியக் கோப்பை 2023 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய பிளேயிங் லெவனிலும் பும்ரா இடம்பெற்றிருந்தார். ஆனால், மழை காரணமாக ஆட்டம் ரத்தானதால், பும்ரா பந்துவீசவில்லை. காயத்தில் இருந்து மீண்டும் இந்திய அணிக்குள் வந்த பும்ராவின் பந்துவீச்சை பார்க்க முடியவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று ஆசிய கோப்பை தொடரில் நேபாலுக்கு எதிராக இந்திய அணி களமிறங்கவுள்ளது.

ஆனால், பும்ரா அவசர அவசரமாக மும்பைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இலங்கையில் இருந்து விமானம் மூலம் மும்பை திரும்பினார் பும்ரா. அதாவது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் நேற்று அவசர அவசரமாக மும்பைக்கு கிளம்பியதால், நேபாளம் உடனான பும்ரா பங்கேற்கமாட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பும்ரா  இன்ஸ்டா பதிவில், தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். குழந்தையின் பெயர் அங்கத் ஜஸ்பரீத் பும்ரா எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே, பும்ரா மும்பை சென்றாலும், ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின்போது மீண்டும் இந்திய அணியில் இணைந்துகொள்வார் என பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. மேலும், பும்ரா முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும், நேபால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும்தான் பங்கேற்க மாட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இன்றைய நேபால் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியில் ஜஸ்பரீத் பும்ராவுக்கு மாற்றாக, முகமது ஷமி களமிறங்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்