இந்த தலைமுறையில் மிகவும் திறமையான பேட்ஸ்மேன் இவர்தான்… பிரையன் லாரா பாராட்டு!
இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் சுப்மான் கில்லுக்கு இது ஒரு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான சுப்மான் கில் மூன்று வடிவங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதில், குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் கில்லின் ரன்களின் எண்ணிக்கை அசாதாரணமானது.
இளம் வீரர் சுப்மான் கில் தற்போது 29 போட்டிகளில் 1584 ரன்களை 63.36 சராசரியுடன் மற்றும் 5 சதங்கள் என இந்த ஆண்டு அதிக ரன்கள் எடுத்தவர். சமீபத்தில் சுப்மான் கில் கூறியதாவது, இது எனக்கு ஒரு சிறந்த ஆண்டு என்று நான் நினைக்கிறேன், 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது சற்று மனவேதனையை தந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, அடுத்த ஆண்டு மற்றொரு உலகக் கோப்பை வரவிருக்கிறது.
அடுத்த ஒரு வருடத்தில், உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் வரவிருக்கிறது. எனவே, நாங்கள் அனைவரும் அதை எதிர்நோக்குகி காத்திருக்கிறோம். வரம் டி20 உலக கோப்பையில் தங்களது சிறப்பை வெளிப்படுத்துவோம் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா, இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில், இந்தத் தலைமுறையின் மிகவும் திறமையான பேட்ஸ்மேன் என்று பாராட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா செல்ல உள்ள இந்திய அணியில் சுப்மான் கில் இடம்பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணியில் கில் ஒரு பகுதியாக உள்ளார். ஆனால், ODI-யில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஒருநாள் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தனிநபர் ஸ்கோருக்கான தனது சாதனையை கில் முறியடிக்க முடியும். கில் இந்தியாவுக்காக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32.20 சராசரியில் 966 ரன்கள் எடுத்துள்ளார், அதே நேரத்தில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். சுப்மான் கில் எனது இரண்டு சாதனைகளையும் முறியடிக்க முடியும்.
இந்த புதிய தலைமுறையில் கில் மிகவும் திறமையான பேட்டர். வரும் ஆண்டுகளில் கிரிக்கெட் உலகை ஆள்வார். அவர் பல பெரிய சாதனைகளை முறியடிப்பார் என்று நான் நம்புகிறேன். அவரால் அதைச் செய்ய முடியும் என நினைக்கிறேன். கில், கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடினால் எனது 501*ஐ முறியடிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 400ஐ நிச்சயம் கடக்க முடியும்.
கில் 44 ஒருநாள் போட்டிகளில் (சராசரியாக 61.38, 103.46) 2271 ரன்கள் எடுத்துள்ளார். T20I-ஐப் பொறுத்தவரை, கில் 11 போட்டிகளில் 304 ரன்கள் (சராசரியாக 30.40 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 146.86) எடுத்துள்ளார். கீழ் அனைத்து வடிவங்களிலும் சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்துள்ளார்.
மேலும், ஐபிஎல்லில் பல வெற்றிகளையும் பெற்றுள்ளார். அவர் எதிர்காலத்தில் பல ஐசிசி போட்டிகளில் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார். டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் டிசம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20ஐ தொடரின் முதல் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.