#BREAKING: இறுதிவரை போராடி இந்திய மகளிர் அணி தோல்வி!!
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பிரிட்டன் அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி போராடி தோல்வி.
கடந்த 4ம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அரையிறுதி போட்டியின் முடிவில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. இதனைத்தொடர்ந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கிரேட் பிரிட்டனை, இந்திய அணி இன்று எதிர்கொள்ள இருந்தது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பிரிட்டன் அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி இறுதிவரை போராடி தோல்வி அடைந்துள்ளது. இந்தியா 3 கோல்கள் அடித்த நிலையில், இங்கிலாந்து 4 கோல் அடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இப்போட்டியில் முதல் பாதியில் இந்தியா முன்னிலை பெற்று வந்த நிலையில், இரண்டாம் பாதியில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது.
ஆனால், இறுதிவரை கடுமையாக போராடியும் இந்திய அணி, பிரிட்டனிடம் தோல்வி அடைந்தது. கடைசி நிமிடங்கள் வரை போராடிய இந்திய அணி பதக்கம் வெல்லாவிட்டாலும் மக்களின் இதயங்களை வென்றுள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு சென்று வரலாற்று சாதனை படைத்ததோடு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது என்பது குறிப்பிடப்படுகிறது.