#BREAKING: பாராலிம்பிக்கில் இரண்டாவது தங்கம் வென்ற இந்தியா!

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கத்தை பெற்று தந்தார் சுமித் அண்டில்.
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனை படைத்துள்ளார். அதாவது ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இரண்டாவது சுற்றில் பாராலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு 68.08 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து இந்திய வீரர் உலக சாதனை படைத்துள்ளார்.
ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 68.08 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து முதலிடத்தில் இருப்பதன் மூலம் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் உறுதி செய்யப்பட்டது. முதல் சுற்றில் 66.95 மீட்டரும், இரண்டாவது சுற்றில் 68.08 மீட்டர் வீசி முதலிடத்தில் இருந்த நிலையில், மூன்றாவது சுற்றில் 68.55 மீட்டர் வீசி தங்கத்தை உறுதி செய்தார்.
இந்த நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் இந்தியாவின் சுமித் அண்டில், ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் அதிகபட்சமாக 68.55 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து உலக சாதனை படைத்ததை தொடர்ந்து, தற்போது தங்கம் பதக்கம் வென்றார். 66.95, 68.08, 68.55 மீட்டர் கணக்கில் தன் சாதனையை ஒரே போட்டியில் 3 முறை முறியடித்து, தனி சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே, மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று நிலையில், தற்போது இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இதுவரை இந்தியா 8 பதக்கங்களை வென்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025