#BREAKING : ஈட்டி எறிதலில் இரட்டை பதக்கம் வென்ற இந்தியா…!
இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தேவேந்திரா வெள்ளி பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தேவேந்திரா வெள்ளி பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இன்று மட்டும் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது. அதன்படி, இதுவரை பாராலிம்பிக் போட்டியில் இந்தியா, ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.