#BREAKING: காமன்வெல்த் – பேட்மிண்டனில் இந்தியாவுக்கு 2வது தங்கம்!
காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதி போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார் இந்தியாவின் லக்ஷ்யா சென்.
2022-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென் தங்கம் பதக்கம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை லக்ஷ்யா சென் 19-21 21-9 21-16 என்ற செட் கணக்கில் மலேசியாவின் NG Tze Yong-ஐ வீழ்த்தி தங்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா தனது 20வது தங்கத்தை பதிவு செய்துள்ளது.
இதற்கு முன் காமன்வெல்த் விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றிருந்தார். இறுதி போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21-15, 21-13 ஆகிய நேர் செட் கணக்கில் வென்றார். காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று பி.வி.சிந்து அசத்திய நிலையில், தற்போது ஆடவர் பிரிவு பேட்மிண்டனில் இந்தியாவின் லக்ஷ்யா சென் தங்கம் பதக்கம் வென்றார். இதன்மூலம் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு 2வது தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது.