பிரேசில், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து உலகக்கோப்பை வெல்லும் விருப்ப அணிகள்- மெஸ்ஸி
கால்பந்து உலகக்கோப்பையை வெல்லும் விருப்ப அணிகளாக பிரேசில், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து என்று மெஸ்ஸி கூறியுள்ளார்.
கத்தாரில் நவ-20இல் தொடங்கும் கால்பந்து உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, இந்த கால்பந்து உலகக்கோப்பையை பிரேசில், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து அணிகள் வெல்லும் விருப்ப அணிகளாக இருக்கின்றன என்று அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா, தனது ஃபிஃபா உலகக் கோப்பை 2022இந்த முதல் ஆட்டத்தில் நவ-22 அன்று சவுதி அரேபியாவுக்கு எதிராக விளையாடுகிறது. குரூப் C இல் இடம்பெற்றுள்ள அர்ஜென்டினா அணி அதன்பிறகு நவ-27இல் மெக்ஸிகோ அணியுடனும், டிச-1இல் போலந்து அணியுடனும் விளையாடுகிறது.
மெஸ்ஸி கூறியதாவது, இந்த உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை மற்ற அணிகளை விட பிரேசில், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் சற்று கூடுதல் பலத்துடன் இருக்கிறார்கள், மேலும் உலகக்கோப்பை தொடர் கடினமாக இருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
மெஸ்ஸி இதுவரை தனது தேசிய அணிக்காக 4 முறை உலகக் கோப்பைகளில் களமிறங்கியுள்ளார். இதுதான் அவருக்கு 5 ஆவது மற்றும் கடைசியான உலகக்கோப்பை தொடராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நாங்கள் இந்த உலகக்கோப்பை தொடரில் நம்பிக்கையயுடன் களமிறங்குகிறோம், எவ்வளவு நேரம் நாம் களத்தில் விளையாடுகிறோமோ அவ்வளவு நம் அணிக்கு நல்லது என்று கூறியுள்ளார்.