வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் பிராவோ.வெஸ்ட் இண்டீஸ் அணியில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் விளையாடி வந்த இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வேதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட் போட்டி ,164 ஒருநாள் போட்டிகளும் ,66 டி 20 போட்டிகளும் விளையாடி உள்ளார்.பிராவோ கடைசியாக இண்டீஸ் அணிக்காக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் விளையாடினார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தற்போது அணியின் கேப்டன்கள் மற்றும் நிர்வாகிகள் என பலர் மாற்றப்பட்டு உள்ளனர்.தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டார்.அப்போது பிராவோ மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு கருத்தை பிராவோ கூறியுள்ளார்.அதில் “நான் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி 20 போட்டிகளில் களமிறங்க உள்ளேன். ஏன்னென்றால் தற்போது அணியில் பயிற்சியாளர், நிர்வாகம் மற்றும் கேப்டன் ஆகியவை மாறியுள்ளது. எனவே இந்த தருணத்தில் அணிக்கு திரும்புவது நல்லது.
நான் டி 20 உலக கோப்பையை மனதில் வைத்து மீண்டும் அணியில் இறங்கவில்லை. உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு என்னைவிட நிறைய திறமையான வீரர்கள் அணியில் உள்ளனர். சரியான திட்டமிடல் இருந்தால் மீண்டும் நாங்கள் உலகிலே சிறந்த அணியாக மாறமுடியும் என கூறினார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …